வங்கி நடைமுறைகளையும், வழங்கும் சேவைகளையும் தொகுத்து தரும் நுால். நடைமுறை அறிவை புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. வங்கியில் தொடர்பில்லாதவர்கள், வாழத் தெரியாதவர்கள் என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. அடுத்து, சேமிப்பு கணக்கு பற்றி விளக்கமாக தருகிறது. தொடர்ந்து நடப்பு கணக்கு விபரத்தை தருகிறது.
தொடர் கணக்கு, வைப்பு நிதி கணக்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்கு போன்ற விபரங்கள் மிகத் தெளிவாக தரப்பட்டு உள்ளன. இரண்டாவது பகுதியில், தவணைக் கடன், நடைமுறை மூலதனக் கடன், ‘டிமாண்ட் லோன், ஓவர் டிராப்ட்’ பற்றி விளக்குகிறது.
கடன் வாங்குவதில் முக்கியமான, ‘சிபில்’ பற்றியும் எளிமையான தகவல்களை தெரிவிக்கிறது.
மூன்றாவது பகுதியில், பாதுகாப்பு பெட்டகம், கிரெடிட் கார்டு, மின்னணு பணப் பரிமாற்றம், இன்டர்நெட் வங்கி பரிமாற்றம் போன்ற விபரங்களை கொண்டுள்ளது. வங்கி நடைமுறைகளை புரிந்து கொள்ள வழிகாட்டும் நுால்.
– ராம்