இது நடந்தது 1960களில்... சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை ஒளிரும் வைரக் கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை அதற்கு சூட்டினர். அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி.
இது முழுக்க அறிவியல் விளையாட்டு. மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக வளர்ச்சியடையாது. ஆனால், மனித செல்களுக்குள் நுழைந்து அவற்றின் துணையால் வளர்ச்சி அடையும் என்ற அறிவியல் உண்மையை உணர்த்துகிறார்.
தடுப்பு மருந்துகளும் இதை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்படுகின்றன. அதனால் தான் மற்றவர்கள் மூலம் பரவும் என்பதால் ‘மாஸ்க்’ அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, இடைவெளி விட்டு பழகுவது போன்ற பழக்கங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அறிவியலை புரிந்து கொள்வதன் வாயிலாக நோய்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பதை கொரோனா வைரஸ் வழியாக உணர்த்தும் நுால்.
– பாலா