வடமொழியில் அமைந்த பஜகோவிந்தம் ஸ்லோகத்தை எழுதி, அதன் பொருளை உரைநடையாகத் தந்திருக்கும் நுால். படிப்பவருக்கு பயன் தரும். பஜகோவிந்தத்தின் மூலத்தை மொழிபெயர்த்து எழுதியதுடன், ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் தமிழில் ஒரு பாடல் விளக்கப்பட்டுள்ளது. ‘கோவிந்தனைப் பாடிடுவாய், துவங்கி, மோட்சம் பெற...’ என்ற பகுதியோடு நிறைவடைகிறது.
கோவிந்தனைப் பாடிடுவாய், வாழ்வின் நிலையாமை, நேரமில்லையே ஆண்டவனைத் துதிக்க, நிலையற்றவையே எல்லாமே, தலைக்கனம் தவிர், நலம் தரும் உறவு, நற்கதி அடைவோரெவர், காலன் அண்டாதிருக்க, பிறவிப் பெருங்கடல் நீந்த, சொர்க்க வாழ்வைப் பெறுவது போன்ற பொருண்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
தாமரை இலை நீர் போல உயிர்களும் மறைந்து விடும். நோய்களால் துன்பம் வருவதால் உயிரினங்கள் சிறப்பில்லாத வாழ்க்கையை அடைகின்றன என விளக்குகிறது. ஆன்மிக அன்பர்கள் படித்து பயன் பெற வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்