புத்தரின் பிறப்பை தெரிவிக்கும் வகையிலான கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். புத்தர் பிறப்புக்கு முன்பிருந்தே வாய்மொழி இலக்கியமாக வழக்கில் நிலவியது. இரண்டு தொகுப்புகளாக உள்ளன.
ஜாதகம் என்ற சொல்லுக்கு, பரம்பரையை உணர்த்துவது எனப் பொருள். ஒருவர் வாழ்க்கைக் குறிப்பை ஜாதகம் என்ற சொல் உணர்த்துகிறது. இதில், அபண்ணக ஜாதகம் முதல் ஆசாதக ஜாதகம் வரையிலான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிவுரைகள் தருவாக அமைந்துள்ளன. போதனைகளும் இடம் பெற்றுள்ளன.
கதைகளில் ஆன்மா என்பது ஒன்றும் இல்லை; முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும் போன்ற உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளன. புத்தர் வாழ்ந்த காலம், அந்தக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், போக்குவரத்து, மறுபிறவி பற்றிய நம்பிக்கை, நீரூற்றை உருவாக்கும் முயற்சி என பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. கதையாக மட்டும் அல்லாமல், வாழ்க்கை பாடமாகவும் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்