சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். போர் பாதிப்பு, பெண் மனம், மன நோய் சார்ந்த விஷயங்களை கொண்டுள்ளன.
நகரத்தில் வாழும் இளம் பெண் ஒருவரை காதலிக்க, பெற்றோர் கிராம விவசாயிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க, இறுதி முடிவை ஒரு கதை பேசுகிறது. இலங்கை ராணுவ பிடியில் இருந்த கிராமத்தை பாதுகாக்கும் சலவை தொழிலாளி கொல்லப்படுவதை, ‘துரோகம்’ என்ற கதை சொல்கிறது.
போர் எங்கு நடந்தாலும் மனிதர்கள் துயரத்தை தான் சந்திப்பர் என்பதை வலியுறுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்