முன்னோரின் வாழ்வியல், வழிகாட்டுதலை இன்றைய தலைமுறை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள அனுபவ அறிவு நுால். வழக்கறிஞராகி பார் கவுன்சிலில் நுழைபவர், இரண்டு பானையில் குடிநீர் இருப்பதை பார்க்கிறார். அங்கு ஜாதி பாகுபாடு வெளிப்படையாக இருந்ததைக் கண்டு ஒரு பானையை உடைத்ததை, தன் தாத்தாவின் அனுபவத்தைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெய்யூர் மருத்துவமனையில், ஜாதி பெயரில் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருந்த நோயாளிகள் வார்டு பற்றிய குறிப்புகள் உள்ளன. குடும்பத்தில் முன்னோர், பெற்றோர், உடன்பிறப்புகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என தலைமுறைகளை பற்றிய செய்தியை சொல்கிறது. ஆதாரமாக, பல அரிய புகைப்படங்கள் தரப்பட்டு உள்ளன.
பிறந்த ஆண்டு, வீடு, தொழில், திருமணம் செய்து கொடுத்த இடம், நிரந்தரமாக வசிப்பது, தற்காலிக குடியேறல், உடல் உபாதைகள், மரணம் என, வாழ்வின் தகவல் களஞ்சியமாக உள்ளது. குடும்ப தலைமுறை பற்றி விரிவான தகவல்கள் திறம்பட சேகரிக்கப்பட்டுள்ளன. குடும்ப உறவு நீடித்தால் தான், முன்னோரை அறிய முடியும் என அறிவுரைக்கிறது. குடும்ப தலைமுறை பற்றிய நுால்.
– டி.எஸ்.ராயன்