விநாயகர் வழிபாடு, திருக்குறள் சிறப்பு, சிவலிங்க வழிபாடு, நீராடும் ஒழுக்கம் என, 48 பெரும்பிரிவுகளாக வெளிவந்துள்ள நுால். பசியே ஏற்படாத சொர்க்கத்தில் கர்ணனுக்குப் பசித்தது. அவன் ஆள்காட்டி விரலை வாயில் திணிக்கச் சொன்னார், நாரதர். பசி அடங்கியது. பூலோகத்தில் கர்ணன், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதற்கு ஆள்காட்டி விரலால் வழி காட்டினான்.
பசி என்பது கொடுமையான பிணி. அதை, உணவு என்ற மருந்தால் தான் சரிசெய்ய முடியும். வயிறு அக்னிக்குச் சமம். அதனுள் செல்லும் உணவு பஸ்பமாகி விடுவதைப் போல அன்னதானம் செய்பவர் பாவங்கள் அழியும் என பதிவு செய்துள்ளது.
ஆன்மிகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடையது. ஆன்மிகத்தைப் பின்பற்றுதல் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடு என குறிப்பிடுகிறது. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மாவின் உண்மைகளை ஆய்ந்தறிதலாகும் என்பன போன்ற கருத்துகள் உள்ளன. ஆன்மிகப் பண்பாட்டின் அடிப்படையை விளக்கி வழிகாட்டும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்