ஜாதி, மதம், இனம், மொழி கடந்து, எல்லாரும் எல்லாமும் பெற வலியுறுத்தி மனிதநேயம் மிக்கவராகத் திகழ்ந்தவரின் பொன்மொழிகளை, 33 பிரிவுகளில் பதிவு செய்யும் நுால்.‘சாமியார்களைச் சந்திக்கவே விரும்பாத மகாத்மா காந்தி, கேரளாவில் ஸ்ரீ நாராயணகுருவை சந்தித்ததுடன், அவதார புருஷர் என்றும் பாராட்டினார்.
புரட்சிக்கவிஞர் பாரதியார் இவரது சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பாராட்டி எழுதிஇருப்பதுடன், அவரது சமஸ்கிருத நுால்களையும், கருத்துக்களையும் பாராட்டியுள்ளார். இது போன்ற பதிவுகளைக் கொண்டுள்ளது. உயர்ந்த மகானின் உன்னத வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்துள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்