சமூக ஏற்றத்தாழ்வை போக்க குரல் கொடுத்த, அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்வியலை சொல்லும் நுால். சென்னையில் சாக்கிய பவுத்த சங்கம் உருவாக்கி, பின்தங்கியிருந்த மக்களை பவுத்த மதத்தை ஏற்க கூறினார். ஒடுக்கப்பட்டோரின் உரிமையை பேச, ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழை துவங்கி, புதன் கிழமை தோறும் காலணா விலையில் விற்றார்.
சீர்திருத்த எழுத்துக்களை இறுதி காலம் வரை கையாண்டவர். இந்த இதழ், தமிழகம் துவங்கி பல மாநிலங்கள் கடந்து, தென் ஆப்ரிக்கா வரை சென்றுள்ளது. புற அழுக்கை விட, அக அழுக்கை நீக்குவது தான் சுத்தம் என்கிறார்.
பெண் கல்விக்கு எதிராக மூட நம்பிக்கை, அச்சமூட்டும் கட்டுக்கதை காரணமாக இருந்தது என்கிறார். ஜாதி, மத, மொழி, இனம், திறன் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை போக்க, சீரிய முயற்சி எடுத்து வெற்றியும் கண்டவர். ஆதிதிராவிடர் சமூகம் தலைநிமிர, அயோத்திதாசர் காரணமாக இருந்ததை கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்