கிராம ஊராட்சி நடைமுறை விதிகளை விரிவாக தரும் நுால். கிராம ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் செயல்பாடுகளை விரிவாக தருகிறது. சட்ட நடைமுறை இயங்கும் வழிமுறைகளை காட்டுகிறது. மூன்று பகுதிகளை கொண்டு உள்ளது. முதல் பகுதியில் கிராம ஊராட்சி நிர்வாகம் பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது.
இதில், 45 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்பில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி, மாநில அரசின் திட்டங்கள் குறித்த செய்திகள் உள்ளன. இது பற்றி, 13 தலைப்புகளில் தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதி, மத்திய – மாநில அரசுகளின் திட்டம் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளது. இது, ஒன்பது தலைப்புகளில் தகவல்களை தருகிறது. மக்களாட்சியை கீழ்மட்டத்தில் வலுவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– மலர்