புத்தரின் தத்துவத்தில் பொதிந்துள்ள சூழலியல் கருத்துக்களை ஒப்பீட்டு அடிப்படையில் பொருத்திக் காட்டும் நுால். சுற்றுச்சூழல் நோக்கில் புத்தரின் கோட்பாடுகள் எட்டு தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. சமயப்பிரிவின் ஒழுக்கக் கோட்பாடுகளை விவரித்து, திரிபீடகம் பற்றி விளக்குகிறது.
இயற்கை மீது புத்தரின் நாட்டமும், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் மீதான அன்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரியல் சூக்தங்களைத் தற்காலச் சூழலுக்குப் பொருத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வனம், வெட்டக்கூடாத தாவரங்கள் என அரிய தகவல்கள் உள்ளன. இயற்கை சார்ந்த விவரிப்புகள் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன. மீன்களுக்கு, புத்த சமயத்துடனான தொடர்பு பொருத்திக் காட்டப்பட்டுள்ளது. துன்பங்களை சுற்றுச்சூழல் பாதிப்புடன் பொருத்தி புத்தரின் வாய்மை நெறிகள் விவரிக்கப்பட்டுள்ளன. மாறி வந்திருக்கும் சுற்றுச்சூழல் நோக்கை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு