சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது பற்றிய நுால். பயணக் குறிப்புகளும் சுவையாக தரப்பட்டுள்ளன. நுால் ஆசிரியரின் இளமைக்காலம், நண்பர்கள், பள்ளிப்பருவம் போன்றவையும் கூறப்பட்டுள்ளது. கவிஞர், மேடைப் பேச்சாளர் என்ற பன்முகத்தை பதிவு செய்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில், வெளிநாடுகளில் சிக்கியதையும், அப்போது இயற்கையை ரசித்து மகிழ்ந்ததையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலையையும் கூறப்பட்டுள்ளது. பயணத்தின் போது மலை, அருவி, ஆறுகளை ரசித்தவற்றை சுவைபட எழுதியுள்ளார். மொழி தெரியாமல் தவித்ததையும் நகைச்சுவையாக கூறியுள்ளார். மலையேற்றம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து உள்ளார். படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பயண விரும்பிகளுக்கு ஆர்வத்தைத் துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
– முகில் குமரன்