அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின்படி, தமிழக அரசு ஊராட்சிகள் சட்டத்தை இயற்றியது பற்றிய நுால். அதன் அடிப்படையில் ஊராட்சி அமைப்புகள் செயல்படுவது பற்றி கூறுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்களுக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு, மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக கிராம, வட்டார ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, கடமை, கூட்டங்கள் நடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், விதிக்கப்படும் வரிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வரவு – செலவு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், சுய வேலைவாய்ப்பு திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம், வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிலம், நீர் பாதுகாப்பு, சிறு பாசன வேலைகள், இணைப்பு சாலைக்கு நிதியை பிரித்தளித்தல் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. தேர்தல் வழக்குகள் போன்றவை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. கிராம, மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள் கடமை ஆற்ற வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்