திருக்குறள் பற்றி திறனாய்வு செய்துள்ள நுால். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே வெண்பாக்களால் இதை விமர்சித்து உள்ளதை தொகுத்து தரப்பட்டுள்ளது. ‘ஓதற்கு எளிதாக உணர்தற்கு அரிதாக உள்ள நுால்’ என்பது மாங்குடி மருதனார் திறனாய்வு.
இத்துடன் திருக்குறள் தொடர்பான செய்திகளும் உண்டு. திருக்குறள் ரஷ்ய நாட்டு கிரெம்ளின் மாளிகை நிலவறையில் இடம் பெற்று உள்ளது. இப்படி அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் உள்ளன.