சோதிட சாஸ்திரத்தில் நவக்கிரக இயக்கங்கள், தொடர்புடைய நட்சத்திரங்கள், கணக்கீடுகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக கூறும் நுால். பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய நட்சத்திர பாதங்களும், நட்சத்திரங்களில் ஆண், பெண், பொது, மிருகம், பறவை, விருட்ச வகைபாடுகளும், அவற்றிற்குரிய திசைகளும் கூறப்பட்டு உள்ளன.
மித்திர, பகை நட்சத்திரங்களும், சந்திர நவாம்ச பலன்களும், கிரக ஆரம்ப யோகங்களும், சூரிய சஞ்சார ராசியை லக்கனமாக கொள்வது போன்ற செய்திகளும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ராசி, நட்சத்திரம், லக்கனம், பாவத்தில் கிரக நிலைகள் அமையும் போது ஏற்படும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொருவரின் ஜனன காலத்தையும், சூரிய உதய நாழிகையையும் கணக்கில் கொண்டு, நட்சத்திர, ராசியைக் கணக்கிடும் முறையும், ராசி கட்டம் அமைக்கும் முறையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சோதிடக் கலையில் நிபுணத்துவம் பெற வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்