ஏவுகணை, ஏவூர்தி எனப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொன்றும் வேறு வேறானவை என்பதை புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால். ஏவுகணை என்பது குறிப்பிட்ட இலக்கை தாக்குவதற்கு அனுப்பப்படும் ஊர்தி எனப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏவூர்தி என்பது விண்கலங்கள் சுமந்து செல்லும் எனவும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் முதன்முதலில் ஏவுகணையைப் பயன்படுத்தியவர் பற்றியும், அந்தத் தொழில் நுட்பம் ஆங்கிலேயருக்கு சென்ற விதம் பற்றியும் தெளிவுபடுத்துகிறது. வீட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில், காற்றடிக்கும் பம்ப் இவற்றால் மேலெழும்பி பறக்கும் தத்துவத்தை செயல்முறையில் எளிமையாக விளக்குகிறது.
ஏவு வாகனம் என அழைக்கப்படும் ஏவூர்தியின் உயரம், அது சுமந்து செல்லும் எடை முதலானவற்றை பிரமிக்கத்தக்க அளவிற்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். ராக்கெட் தொழில்நுட்பத்தை சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்