பள்ளிக்கால நிகழ்வுகளை அசை போடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படித்து மகிழும் வண்ணம் உள்ளது. வலது கால் வளர்ச்சி குறைந்த மாணவனுக்கும் ஆசிரியருக்குமான உரையாடல்கள், நெருக்கம் குறித்து, ‘அவனே சொல்லட்டும்’ என்ற சிறுகதை, குடியின் கேட்டை அம்பலப்படுத்துகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற வேட்கையோடு பெயின்டராக வாழ்பவர் பற்றிய, ‘வாத்தியார்கள் தினம்’ கதை, தகுதித் தேர்வின் மற்றொரு முகத்தை வெளிக்காட்டுகிறது.