பொதுமக்களுக்கு சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு, கேள்வி – பதில் முறையில் விளக்கம் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். முக்கிய சட்டங்கள் குறித்த தகவல்கள், ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்புவது எப்படி, காவல் நிலையத்தில் புகார்கள் அளிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
தன் வழக்கில் தானே ஆஜராவது எப்படி, போலீசார் கைது செய்தால் என்ன செய்ய வேண்டும், ஜாமின் பெறுவது எப்படி போன்ற தகவல்கள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் வழிமுறைகள், வழக்கறிஞரை நியமிப்பது, நீக்குவது குறித்த முறைகளும் கேள்வி – பதில் முறையில் அளிக்கப்பட்டுள்ளன.
ஒரு வழக்கில் வாய்தா வாங்குவது எப்படி? பொய் வழக்கு போடுவதை தடுப்பது, சாட்சி விசாரணை, குறுக்கு கேள்விகள் கேட்பது உள்ளிட்ட பலவிதமான சட்ட தகவல்கள் உள்ளன. சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ள சட்ட நுால்.
– முகில் குமரன்