மொத்தம், 36 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு நுால். தாயின் பாசத்தை, மனித நேய குணங்களை, இயற்கையின் சுவாசிப்பை கவிதை நீரால் நனைய வைக்கிறது. அன்பு, ஆத்மாவுக்குள் இருந்து வரவேண்டும் என்கிறது. நீங்காத நினைவுகளை, வேரோடு பிடுங்கி எறிய வேண்டாம் என்கிறது. எப்போதும் மவுனமாக இருக்காதே என்கிறது.
ஜாதி, மதம் பார்க்காமல் வருவது தான் காதல் என்கிறது. கிராமத்தின் அழகியலை கண்முன் கொண்டு நிறுத்துகிறது. இயற்கையை நேசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கவிதையும், பெண்ணின் மனதுக்குள் இருக்கும் அன்பை காட்டுகிறது.
– டி.எஸ்.ராயன்