பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வின் நிகழ்வுகள், பாசப் போராட்டங்கள், காதல், சமூக நீதி, மாணவர்களின் ஒழுகலாறுகள் போன்றவற்றை கருவாக வைத்து கதைகள் புனையப்பட்டுள்ளன.
பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வுகளுங்கூட கதையாகப் பின்னப்பட்டுள்ளன. ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு கற்பித்த ஆசிரியருக்கு, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத தன்தாய்க்கு கையெழுத்துபோட கற்றுத் தந்த நிகழ்வு, மன நிறைவை தந்ததாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வித்தியாசமான வரதட்சணை, கசாப்புக் கடைக்காரருக்கு ஆட்டின் மீது ஏற்பட்ட கருணை ஆகியனவற்றை விளக்குவதோடு, ‘சமுதாயத்தை நோக்கி எறியப்படும் அம்புகள், தீயனவற்றை அழிக்க வேண்டுமேயொழிய, நல்லனவற்றுக்கு ஆலகால விஷமாக இருக்கக் கூடாது’ என்பது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நுால்.
– புலவர் சு.மதியழகன்