சுவாமி அய்யப்பனின் வரலாற்றை எளிய நடையில் எழுதியுள்ளார் இந்நுாலின் ஆசிரியர் செல்லப்பா. பெரியவர்கள் மூலம் அறிந்த தகவல்கள், மாளிகைப்புறம் சன்னிதியில் பாடப்படும் அய்யப்பனின் வரலாற்றைச் சொல்லும் பறைக்கொட்டு பாடல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுள்ளார்.
அய்யப்பனின் புராண வரலாறு, அய்யப்பன் கோவிலில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற கோஷம் முழங்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது போன்ற தகவல்கள் சிறப்பாக தொகுத்து தரப்பட்டுள்ளன. பல்வேறு புராணக் கதைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குரல் நுாலில், மூக்கில் விரல் வைத்து சிந்தனை செய்யும் அய்யப்பன் பற்றிய தகவல், இந்நுாலுக்கு முத்தாய்ப்பாக திகழ்கிறது.
– இளங்கோவன்