பெண்மையைப் போற்றுவோம், மதிப்போம் என்ற அடிப்படையில், 26 தலைப்புகளில் விரிவான கருத்துரைகளை வழங்கியுள்ள நுால். பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் பருவங்கள், பண்புகள், உறவுநிலைகள், இன்னல்கள், காதல், சந்தேகம், கல்வி, கோபம், சுதந்திரம், மகிழ்ச்சி எனப் பலதரப்பட்டவற்றை விளக்குகிறது.
தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி காரணத்தால் திருமணம் என்பதை கட்டாயப்படுத்த முடியாது. திருமணம் சம்பந்தமாக, பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவது ஒழுங்கற்ற செயல் என்று கூற இயலாது என பதிவு செய்கிறது.
புகுந்த வீடு என்ற இடம்பெயர்வு தருணத்தையும், பெண்களின் கோபத்தையும் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஆண், பெண்களை பார்க்கும் பார்வை, ஊதியம் வாங்காமல் வீட்டு வேலை செய்வது அர்ப்பணிப்பு என பதிவு செய்கிறது. மாற்றத்துக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்