வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, காவல் துறை, வனத்துறையால் மலைவாழ் மக்கள் அனுபவித்த கொடுமையை விவரிக்கும் நுால். மலைவாழ் மக்கள், உடல் உழைப்பை தவிர வேறு எந்த அரசியல் சூது வாதும் தெரியாதவர்கள் என்றும், தனித்தனி பண்பாடு, கலாசாரம், குலதெய்வ வழிபாட்டுடன் வாழ்கிறவர்கள் என்கிறது.
வீரப்பனின் காட்டு வாழ்க்கையின் போது வனத்துறை அத்துமீறல்கள், சித்ரவதைகளை பட்டியலிடுகின்றன. அதிரடிப்படை எஸ்.பி., சஞ்சய் அரோரா, வீரப்பனிடம், ‘ஆடியோ’வில் பேசியதை கூறுகிறது. வீரப்பனை பிடிக்க முடியாமல், குறுக்கு வழியில் கொன்றதாக விவரிக்கிறது.
போலீசார் பலாத்காரம் செய்ததை, நிருபரிடம் கண்ணீர் மல்க சொல்கிறார் கைக்குழந்தையுடன் இருந்த பெண். இப்படி, ‘நக்கீரன்’ இதழில் வெளிவந்த, பாதிக்கப்பட்டவர்களின் ‘ஆடியோ, வீடியோ’ பேட்டிகள் இடம் பெற்றுள்ளன; தலைப்புக்கு ஏற்ற புகைப்படங்களும் உள்ளன. மனித உரிமை மீறலை விவரிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்