காந்திய வழியில் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய நுால். இயற்கையின் உயிர்வட்டம், குமரப்பாவின் தனிமனிதன், கற்களுக்குள் காந்தி, பி.எம்.ஹெக்டேவின் மருத்துவத்துக்கு மருத்துவம், சுந்தர்லால் பகுகுணா, ஜர்ணா தாரா சவுத்ரி, லாரி பேக்கர், மலாலா, பாபா ஆம்தே, வானதி வல்லபி வாழ்க்கை சித்திரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.
ஆளுமைகள் பற்றி நல்ல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. காந்தியம் சில வரையறைகள் என்ற கட்டுரை, ஆழ்ந்த கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது. காந்தியம் அறிவியலுக்கு எதிரானதல்ல. ஆனால், தொழில் நுட்பத்தைக் கவனத்துடன் தான் அது அணுகும் என்ற கருத்தியலின் அடிப்படையில் அமைந்துள்ளது.
காந்தியக் கல்வி என்பது தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்பது கருத்தாக உள்ளது. சில ஆளுமைகளை ஆழ்ந்து புலப்படுத்தி, அவர்களின் சீரிய தொண்டு குறித்து எழுதப்பட்டுள்ளது. கட்டடக் கலை நிபுணர் எலிசபெத் பேக்கரின் பன்முக ஆற்றல், தொழு நோயாளிகளுக்கு தொண்டு செய்த பாபா ஆம்தே என பல ஆளுமைகளை அலசி ஆராயும் நுால்.
– ராம.குருநாதன்