அமானுஷ்யத்தை விரும்புவோரை திருப்திபடுத்தும் நாவல்.மந்திர தந்திர கட்டுகள், கட்டுக் கதைகள் நிறைந்த கொல்லிமலையே கதை களம். போர்க்குணம் மிகுந்த செல்லி, வீர தீரச் செயல்களால் வனத்தையும், வன உயிரிகள், சித்தர்களை காத்து, வணங்காமுடியானிடம் இருந்து உரிமையை உறுதிப்படுத்துகிறாள்.
புதுப் புது சொற்கள், திகில் திருப்பங்கள், ஜனரஞ்சக எழுத்து நடை, கம்பளத்தாரின் வாழ்க்கை, மாந்த்ரீக உலகம், போர்க்கலை என சுவாரசியம் நிரம்பி வழிகிறது. கற்பனைக்கும் அப்பால் மாய உலகத்திற்குள் சென்று திரும்பிய உணர்வை தருகிறது.
– பெருந்துறையான்