சதுரகிரி மலையையும், நாகங்களையும், கருடனையும் மையமாக வைத்து புனையப்பட்ட நவீனம். நாகங்களை பற்றிய விளக்கங்கள் முன்னுரையாக சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒருவருக்கு அதிக வேதனை வருகிறது என்றால், இறைவன் நெருங்கி வருகிறார் என்ற தத்துவமும் விளக்கப்படுகிறது. கிருஷ்ணருக்கும், ரோகிணி நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பும் அறிய முடிகிறது.
பணம் தேடும் ஆர்வத்தில் மனிதன் ஆரோக்கியத்தை கவனிப்பதில்லை. ஆரோக்கியத்தை இழந்த பிறகு பணத்தை செலவு செய்கிறான் என விளக்குகிறது. பாம்பு உலகம் பற்றிய புத்தகம். – சீத்தலைச் சாத்தன்