ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் இன்றி மனதில் பதியும் நீதி சிறுகதைகள் தொகுப்பாக அடங்கியுள்ள நுால். ஒவ்வொரு கதையும் அறிவைப் போதிக்கிறது. எளிமையாக, இனிமையாக, சுருக்கமாக மனதில் பதியுமாறு கூறப்பட்டுள்ளது.
கதைகளில் காணப்படும் நீதி என்பது எல்லாருக்கும் பொதுவானது, ஒரு இனத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு குலத்துக்கோ, ஒரு மொழிக்கோ என பிரித்துக் கூறப்பட்டது அல்ல! நீதி காலத்தால் மாறாது; அழியாது; ஏழை என்றும், செல்வர் என்றும் வேறுபாடு பாராதது.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த 260 நீதிக் கதைகள் தொகுப்பாக இடம் பெற்று உள்ளன. சிறப்பு வாய்ந்த சிறுகதை தொகுப்பு நுால்.
– வி.விஷ்வா