இறந்தவனை உயிர்ப்பித்த மகானைக் கண்டு பக்திப் பரவசத்துடன் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளின் பாதம் பணிந்து வணங்கினர். திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசி, உணவுப் பொருட்கள், வள்ளலாரின் சித்தி வளாக மாளிகைக்கு திடீர் என வந்தன. உணவுக்கு தவித்த பணியாளர்கள் ராமலிங்க அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.
வாழ்ந்து மறைந்த 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பட்ட துன்பங்கள், அதைத் தாண்டி செய்த தியாகங்கள், பலன்களை எளிய நடையில் விளக்கும் நுால்.
சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வரை சித்தர்களை என்ன பாடுபடுத்தியது, ஏற்றுக் கொண்ட பின் எப்படி கொண்டாடியது என்பதை தருகிறது. மனிதனாக பிறந்து மகானாக மாறியவர்கள் பற்றி தொகுத்து தரும் நுால்.
–
எம்.எம்.ஜெ.,