வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அடிக்கடி பார்வையில்படும் சாதாரண நிகழ்வுகள், எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு உரியது என்பதை உணர்த்தும் நுால். ஊரே வெறுக்கும் நாயொன்று, பஞ்சவர்ணம் பாட்டியிடம் அடைக்கலம் ஆவதும், துரத்தித் துரத்தி கோழிக் குஞ்சுகளை கொன்றொழித்த அதன் மீது, பாட்டிக்கு பாசம் வந்ததை, ‘வாயும் வயிறும்’ கதை தருகிறது.
புகுந்த வீட்டில் தந்தையின் புகைப்படத்தை மாட்டியதற்காக லட்சுமி படும்பாட்டை, ‘புகைப்படம்’ கதையும் மிக உருக்கமாகச் சொல்கிறது. விழிப்புணர்வையும், பேரன்பையும் விதைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
–
சையது