தொழில் செய்ய, வங்கிகள் வழங்கும் கடன் வசதிகள் குறித்த நுால். வியாபாரிகளின் நேர்மை, நாணயம், வங்கி அதிகாரிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினால், தேவைக்கு ஏற்ப கடன் வாங்கி, தொழிலை விரிவுபடுத்த முடியும் என்கிறது.
‘வியாபாரம் என்றால் என்ன’ என துவங்கி, ‘தமிழக வங்கி கிளைகள் விபரம்’ முடிய, 14 தலைப்புகளில் விவரிக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி தாக்கல், பதிவு சட்டங்கள், பான் மற்றும் டான் அட்டை வித்தியாசம், சிபில், வாராக்கடன் தொடர்பான விளக்கம், வழிகாட்டுதல்கள் உள்ளன. சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்