மழலை, அம்மா, தந்தை, கோபம், சமையலறை, நேரம், அனுபவம், சிற்பம், பயணம் என, அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை தலைப்புகளாக கொண்ட கவிதை தொகுப்பு. பத்து மாதம் சுமக்கும் தாயின் வலியை, மழலை கவிதை உணர வைக்கிறது. ‘கண்ணாடி வளையல்’ கவிதை, சிறு வயது நினைவுகளை அசை போடச் சொல்கிறது.
பயன்படுத்திய பொருட்களை, ‘நினைவு சின்னங்கள்’ கவிதை நினைக்கத் துாண்டுகிறது. சுவை, பாசம், பரிமாற்றம், பொறுப்பு, கற்றலை, சமையலறை கவிதை கற்பிக்கிறது.
கொரோனா காலத்து குடும்ப சிக்கனத்தை பேசுகிறது. குழந்தையின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பை, எதார்த்த வரிகளால் பரிசளிக்கிறது. பேருந்து, ரயில் பயணத்தின் உரையாடல்களை, மனம் விட்டு பேச வைக்கிறது. கிராமத்து காதலை மண் மணம் வீச பறக்க விடுகிறது. தாய் மனதை ஆரத்தழுவி பாடுகிறது. காதலியின் அணிகலன்களை அழகாக்கி குளிர வைக்கிறது. மின்மினி பூச்சி போல் கண்முன் சிமிட்டும் கவிதை நுால்.
– ராகவ்