ரத்தினக் கற்களின் தோற்றம், வரலாறு, கிடைக்கும் இடங்கள், வகைகள், தன்மைகள், பயன்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். எரிமலை வெடித்துச் சிதறி குழம்பாக வெளி வருகிறது; இந்த குழம்பு குளிர்ந்து வாயு கலந்த தாதுக்களாக பலவித பரிமாணங்களில் உலோக கலவைகளாகவும், தாது உப்புகளாகவும், பாறைகளாகவும், சுண்ணாம்புகளாகவும் மாறுகின்றன.
இந்த பரிமாற்றத்தில் முதிர்ச்சி அடைந்து கிடைக்கப் பெறுவதே ரத்தினக் கற்களாகும். வைரம் மற்றும் நவரத்தின கற்கள், அதன் நிறம், படிக அமைப்பு, ஒளிரும் தன்மை, வடிவத்தன்மை, கடினத்தன்மை, ஒப்படர்த்தி, ஒளி வீச்சு, ஒளிச் சிதறல், நிறப் பிரிகை, கீறல்களை வைத்து கண்டறியப்படுகிறது.
நவரத்தினங்களின் மீது நிறமேற்றல், எண்ணெய் நிரப்பல் பட்டை தீட்டல், மெருகேற்றல் முறைகளும், கற்களை வாங்கும் போது பரிசோதிக்கும் முறைகளும் நவீன கருவிகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ரத்தினக் கற்களின் பெயரால் ஏமாற்றுகளும் மோசடிகளும் நடப்பதை தவிர்க்கவும், நவரத்தினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உகந்த நுால்.
–
புலவர் சு.மதியழகன்