பக்தி நிலையை முன்னிலைப்படுத்த, சைவ சித்தாந்த தத்துவங்களை முதன்மைப்படுத்தும் நுால். தத்தத்வம், மஸியின் விளக்கமே சிவபுராணம் எனக் குறிப்பிடுகிறது. மங்கல வாழ்த்து பாடலில் இடம்பெற்ற வாழ்க, வெல்க, போற்றி முறையே தத்துவம், அஸி என்னும் மகா வாக்கிய சொற்களுக்கு ஈடான குறியீடுகள் என விளக்குகிறது.
‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் முறையை விளக்குவதோடு, இம்மந்திரத்தின் மூன்று மெய்ப்பொருள் உண்மைத் தன்மையை அறிவுறுத்துகிறது. தத்தத்வம் மஸி என்னும் பதங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ள சிவபுராண வரிகளை விரிவாக விளக்குகிறது.
அனுபூதி, மெய்ச்சுடர், கட்டு உடைதல் என்ற தலைப்புகளில் சிவபுராணத்தில் அடங்கியுள்ள தத்துவங்களை வெளிப்படுத்துகிறது. ஈசனும் ஜீவனும் காரியத்தால் வேறு வேறு என்றாலும் காரணத்தால் ஒன்றே என்பதை, ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என விளக்குகிறது. சைவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அடங்கிய நுால்.
– புலவர் சு.மதியழகன்