நகைச்சுவை நாடகங்களைக் கொண்டிருக்கும் நுால். படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது. காதல் செடியும் கல்யாண இடியும், நகைச்சுவை ஒரு ஆராய்ச்சி நகையில்லாத நங்கையா, உலகம் சிரிக்கிறது, தலைவர்கள் ஜாக்கிரதை, சிரிக்காதவர் மாநாடு, இனித்துயரம் உட்பட ஆறு நாடகங்கள், சமுதாய, அரசியல், திரைப்படங்களை கேலி செய்வதாகவும், நகைச்சுவையை துாண்டும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.
‘காதல் செடியும் கல்யாண இடியும்’ என்ற நாடகத்தில், திருமணத்தை தள்ளிப்போடும் உரையாடல் வேடிக்கையாக புனையப்பட்டுள்ளது. ‘உலகம் சிரிக்கிறது’ என்ற நாடகம் மணிமேகலையில் வரும் பாத்திரங்களை கொண்டு பின்னப்பட்டுள்ளது.
இதில் வரும் மாமா, கற்பனை புனைவு. வசனம் வீறுநடை கொண்டது. பொழுதுபோக்கும் வகையில், ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்டிள்ள நுால்.
– ராம.குருநாதன்