மெட்டுகளுடன் கூடிய, 100 இசைப்பாடல்களின் தொகுப்பு நுால். கனல் என்பது நெருப்பு. எரிதல், கொதித்தல், சினத்தல், சிவத்தல் என்ற பொருட்கள் தரும். புனல் என்பது நீர். ஆறு, குளிர்ச்சி என்ற பொருட்களை தரும். இப்பொருட்களுக்கு ஏற்ப, கனலும் புனலும் கொண்ட கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.
எளிய இயல்பான சொற்களில் தேவையான கட்டமைப்புடன் அமைந்திருக்கிறது. அன்பு நிறைந்த காதலையும், சமூக சிக்கல்களையும் எளிமையாகப் பதிவு செய்துள்ளது. பெண்களை உயர்வாக முற்போக்காகக் காட்டுகிறது. குடும்ப உறவின் மேன்மை, தீண்டாமை, பெண்ணியம், விடுதலை, சுற்றுச்சூழல், அரசியல் தொடர்பான கவிதைகள் ரசனைக்குரியன. மழைக்கும், மண்ணுக்கும், மக்களுக்குமான கவிதை நுால்.
–
பன்னிருகைவடிவேலன்