ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஐந்து நாடகங்களின் மையக்கருத்தை கொண்டு உருவாக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இரட்டையராக பிறந்த அண்ணன் – தங்கை வாழ்வில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து வெற்றி பெற்ற நிகழ்வும், பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற திருமணங்களும் பற்றி கூறப்பட்டு உள்ளது.
பகைவனின் சதித் திட்டத்தால் காதலியைக் கொன்று, உயிரை மாய்த்த ஒதெல்லோவும், உடன் பிறந்த தம்பி பேராசையால் பிராஸ்பரோ என்ற அரசன் பட்ட துன்பங்களும் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. கற்ற அற்புத சக்தியால் புயலை உருவாக்கி தம்பிக்குப் பாடம் புகட்டியது பற்றியும் கூறப்பட்டுள்ளது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மாணவ – மாணவியருக்கு நல்லொழுக்கங்களைக் கற்பிக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்