தமிழ் மொழியில் வழங்கப்படும் 1,000 விடுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அகர வரிசையில் தொகுத்து தரும் நுால். மொழியில் உருவாகி வந்தவையே விடுகதை, பழமொழி, மரபுத் தொடர் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்.
விடுகதைகள் என்பதற்கு புதிர், நொடி, பிசி, உவமேயத்தை உவமானத்தால் குறிப்பிடுவது என அகராதியில் காணப்பட்டாலும் தொல்காப்பியம், ‘பிசி’ என்றே குறிப்பிடுகிறது. வட்டார சொற்களாகவும் பேச்சு வழக்கிலும் அமைந்துள்ளன. உற்சாகமூட்டி எண்ணத்தைக் கிளறி சிந்தனையைத் துாண்டி அறிவு வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
சோர்வை நீக்கி ஊக்கத்தை ஊட்டும் வகையில் விடுகதைகளும் அவற்றுக்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ‘தாடிக்காரன், மீசைக்காரன் கோவிலுக்கு போகும் போது வெள்ளைக்காரன் என்பதற்கு தேங்காய் என நகைச்சுவை மிகுந்தும், இலக்கியச் சுவை செறிந்தும் அமைந்துள்ளன. வேடிக்கையாக பொழுது போக்க உகந்ததாக அமைந்துள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்