திருமணத்துக்கான நட்சத்திரம், ராசிப் பொருத்தம் பற்றி கூறும் நுால். திருமணம் நடத்துவதற்கு உரிய கால அளவை தெரிவிக்கிறது. ஜாதகம் இல்லாதவருக்கு அவரவர் பெயரைக் கொண்டே ராசி, நட்சத்திரம் தெரிந்து கொள்ளலாம். அதன்படி, பொருத்தம் பார்க்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
விசேஷ நட்சத்திரங்கள் நான்கு எனவும், தோஷமுள்ளவை நான்கு என்றும் குறிப்பிட்டுள்ளது. பரிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமணப் பொருத்தங்கள் பார்க்க ராசி, நட்சத்திரங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. பொருத்தங்கள் தரப்பட்டுள்ளன. பொருந்தி இருக்க வேண்டியவை பற்றி தனியே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்ணின் நட்சத்திரப்படி ஆணின் நட்சத்திரத்திற்கு மணப் பொருத்தம் பார்க்க அட்டவணை தரப்பட்டுள்ளது. ஆணின் நட்சத்திரத்திற்கும் பொருத்தங்கள் தரப்பட்டுள்ளன. ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் நடத்துவோருக்கு உதவும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்