உலக அளவில் பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்கு பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும் நுால். வாழ்க்கை வரலாறு போல் தகவல்களை கொண்டுள்ளது. நாடுகளை ஏமாற்றும் அமெரிக்காவின் எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
அமெரிக்காவின் கூலிப்படை போல் செயல்பட்டு, பல நாடுகளையும் ஏமாற்றி பொருளாதாரத்தை அபகரிக்கும் செயல் பற்றி விரிவான ஆதாரங்களை தருகிறது. பெருநிறுவன செயல்பாட்டின் நயவஞ்சகத்தனத்தை தோலுரித்து காட்டுகிறது.
ஏழை நாடுகளுக்கு, பன்னாட்டு நிதியமைப்புகள் மூலம் கடன் கொடுக்க வைத்து, அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியை தடுக்கும் நிலையை வெளிப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இந்த நுால் வெளிவந்த போது, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; விவாதங்களை கிளப்பியது. இப்போது, எளிய தமிழ் நடையில் வந்துள்ளது. அமெரிக்க அரசு மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடனான உறவை வெட்ட வெளிச்சமாக்கும் நுால்.
–
மலர்