ஸ்ரீ அரவிந்தரிடம் தெரிந்த விஷயங்களே இவ்வளவு மலைப்பு தருவதாக இருக்குமானால், அறியப்படாத ஆன்மிக மறுபக்கத்தை எப்படி வரையறுப்பது என மலைப்பைத் தருகிறது இந்த நுால். ஸ்ரீ அரவிந்தர் ஓர் இலக்கியவாதி; மெத்தப் படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். இரக்க குணம் கொண்டவர்; 10க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பல முகங்கள் கொண்டவர்.
இவற்றில் எதுவும் ஒட்டாத, மாறுபட்ட தன்மையைக் கொண்டதாய் விளங்குகிறது அவரது யோகத் திருமுகம். அரவிந்தர் பற்றி விவரிப்பதோடு, ஸ்ரீ அன்னைக்கு அளித்த முக்கியத்துவம், ஆஸ்ரமத்தை அன்னை நடத்திய விதம் ஆகியவையும் கூறப்பட்டுள்ளது. ஆன்மிக நுாலாக மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட வரலாற்றின் இறுக்கமான பக்கங்களையும் உணர்த்தும் நுால்.
–
இளங்கோவன்