மிகச் சரியான முறையில் நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணிக்கப் பயன்படும் நுால். துவாதச பாவ ஸ்புடக் கணிப்பதற்கு, ஜாதகர் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, பிறந்த மாதம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கடிகார மணி அளவில் சரியாகக் குறிக்க வேண்டும் என கூறுகிறது.
நட்சத்திரம், நேரம் கொண்டு ஜாதகம் கணிக்கும் முறையை விரிவாக விளக்குகிறது. அட்சாம் சம்ரேகாம்சம் என்பதன் விளக்கமாக வானத்தில் சூரிய மண்டலம் போன்றவை உள்ளன. நிராயன துவாதச பாவ ஸ்புடக் கணிதம் பற்றிய புத்தகம் தமிழில் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது.
லக்கின ஸ்புடம் கணிப்பதற்கு அவசியமான நட்சத்திர ஓரை மணியையும், முக்கிய இடங்களுக்கான அட்சாம்ச ரேகாம்சத்தையும், அயனாம்சத்தையும் சொல்கிறது. ஜோதிடம் பயில்வோருக்கும், நாழிகை முதலியவற்றை கொண்டு ஜாதகம் கணிக்கும் ஜோதிடர்களுக்கும் பயன்படும் நுால்.
–
பேராசிரியர் இரா.நாராயணன்