திறமை, நேர்மை, உழைப்பு, சகமனிதர் அக்கறை, சமயோசிதம் வளர்த்து கொள் போன்ற கருத்துகளில் கதைகளை படைத்துள்ள நுால். ஏழைக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது அல்ல, கார்ப்பரேட் என்கிறது.
சட்டத்தை மீறாமல், முறையாக வரி செலுத்தி, ஜாதி, மத வன்மம் காட்டாமல், நேர்மையாக உழைத்து நிறைவாக வாழ வேண்டும் என்கிறது. இதற்கு, கார்ப்பரேட் யுக்தி உதவுவதாக கதைகள் வழியே கூறுகிறது.
பணிக்காக நிறுவனங்கள் மாறும்போது, புதிய தொழில் யுக்தி, பிறருக்கு கற்று கொடுக்கும் அனுபவம், முன்னுதாரணமான வாழ்வு கிடைக்கும் என்கிறது. அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை, மன ஓட்டங்களை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ளன கதைகள்.
எவ்வளவு உயர சென்றாலும், பழையதை மறக்காமல் இருப்பது தான் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் என்கிறது. வாசிப்பின் சுவாரசியத்தை கூட்டும் சிறுகதை தொகுப்பு நுால்.
–
டி.எஸ்.ராயன்