குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் தோஷங்களுக்கான தீர்வுகளை கூறும் நுால். ஜாதகப்படி சரம், ஸ்திரம், உபயம் என ராசிகளை வகைப்படுத்தி ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் துன்பங்கள், செய்ய வேண்டிய வழிபாடுகள், தவிர்க்க வேண்டியவை பற்றி கூறுகிறது.
அஸ்ட நாகதோஷ நிவர்த்தி, கர்ப்பத்தை அறிதல், கவலைகளைத் தீர்க்கும் கிரகங்களின் அற்புத ஆசார விதிகள், குரோத காரண கிரகங்களின் தீர்வுகள், சாஸ்திர ரீதியாக பல்லி, ஒவ்வொரு கிழமையிலும் எந்த திசையில் இருந்து ஒலி எழுப்புகிறதோ அதற்கான பலன்கள் பற்றி பேசுகிறது.
வடித்த சாதத்தில் ஏற்படும் எட்டு வகை தோஷங்கள், நிவர்த்திகள், புண்ணியம் தரும் விருட்சங்களான அரச மரம், கல் ஆல மரம், வில்வ மரம், திருவாத்தி மரம், வன்னி மரம், மா மரம், வேங்கை மர மகிமை மற்றும் நன்மை தரும் வழிபாடுகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குருவருள் இன்றி திருவருள் இல்லை என்பதை காட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்