மணிமேகலை காதைகள் அனைத்தையும் நாவல் வடிவில் உரைநடையாகக் கூறப்பட்டுள்ள நுால். புத்த மதச் சிறப்புகளை வெளிப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இக்காப்பியத்தில் புத்த சமயத்தின் ஹீனயானம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. பெண்களை வெகுவாக இழிவுபடுத்திய காலத்தில், மணிமேகலை அன்றாட வாழ்க்கை முறையைப் பதிவு செய்த காவியமாக இருப்பதை உணரலாம்.
மணிமேகலையின் அறச்சீற்றம் உரையாடல்களில் இயல்பாகவே அமைந்து வெளிப்படுகிறது. உதயகுமாரன் பளிங்கு மண்டபத்தில் மணிமேகலையின் அழகில் சலனப்படுதல், உவவனத்தில் காணாத மணிமேகலை, மணிபல்லவத் தீவில் துயிலெழுதல், மணிமேகலைக்குள் ஏற்படும் மாற்றங்கள், அறவண அடிகள், மணிமேகலைக்கு ஆபுத்திரன் கதையைக் கூறுவது, அட்சய பாத்திரத்தை ஏந்தி மணிமேகலை புகார் வீதியில் பிச்சையெடுத்தல் போன்றவை திரைக்காட்சிகளாக விரிகின்றன. நாடக உரையாடல்கள் எளிய வாசிப்புக்கு மேலும் உதவுகிறது.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு