பட்டாசுக்கு பிரசித்தி பெற்ற சிவகாசி பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் பற்றி செய்தி கூறும் நுால். பெரிதும் கொண்டாடப்படும் பத்திரகாளி அம்மன், நாடார் மற்றும் நாயக்கர் இன மக்களிடையே குலதெய்வமாகப் போற்றப்படுகிறது. தல வரலாறு, நாட்டார் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், பூஜை முறைகள் என அமைந்துள்ளன.
கிறிஸ்துவ தெய்வங்கள் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. மழை வேண்டாம் என்று வேண்டிய கோவிலும் உள்ளது. கோவில் சார்ந்த பண்பாட்டு வரலாற்றை அறிய உதவும் நுால். – ராம.குருநாதன்