தீபாவளி சிறக்க ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் வழங்கிய அருளுரை மற்றும் ஆன்மிக சிறப்பு எழுத்தாளர்களின் கட்டுரை, கவிதைகளுடன் மலர்ந்துள்ளது, அம்மன் தரிசனம் தீபாவளி மலர். பக்கத்துக்கு பக்கம் சுவாரசியத்துக்கு குறைவில்லை.
இந்த மலரில், 57 சுவாரசியமிக்க படைப்புகள் இடம் பெற்றுள்ளன. திருப்புகழில் அருணகிரிநாதர் கூறும் அத்வைத நிலை பற்றிய சிறப்பு கட்டுரை இடம் பெற்றுள்ளது. பக்தி எனும் அமுதம், பிறர் நலம் பேணல், கர்ம யோகம், தன்வந்திரி திரயோதசி, ஒரு தனி முதல்வனின் ஒப்பற்ற தீர்ப்பு, குருவிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பவன் வாழ்வு பரிணமிக்கும் போன்ற தலைப்புகளில் ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
காசியும் கங்கா ஸ்நானமும் என்ற தலைப்பில் அற்புதமான கட்டுரை இடம் பெற்றுள்ளது. காசியின் சிறப்புகள் அதில் கூறப்பட்டுள்ளன. கங்கா ஸ்நானத்தை குறிக்கும் படமும் இடம் பெற்றுள்ளது. கதைகளும், கட்டுரைகளும் ஆன்மிக ஞானத்தை வளர்க்கும் விதமாக எழுதப்பட்டுள்ளன. சிறப்பான படங்களும் அமையப் பெற்றுள்ளன. தீபாவளியை சிறப்பிக்க வந்துள்ள மற்றொரு வண்ணக் களஞ்சியமாக மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர்.
– ராஜா