சடார் சடாரென்று திருப்பங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை துாண்டும் நிகழ்ச்சிகள். காதலித்தவன் ஒருவன், கல்யாணம் கட்டியவன் ஒருவன் என்பது சாதாரணமாக உள்ள கதை.
கட்டியவனை உதறி வரச் செய்து, பெற்றவர்களே காதலித்தவனுக்கு மணம் முடிப்பதும், காதலித்த கணவன் வில்லனாக மாறுவதும் புதுமை. முடிவு சுபம் அல்ல. சுபத்தை தொக்கி நிற்க வைத்திருப்பது ஆசிரியரின் எழுத்து திறமை.
ஒருவர் ஜெயித்தால் நிச்சயம் மற்றொருவருக்கு தோல்வி தான். இந்த சத்திய வார்த்தையில் லாவகமாக கதையை நகர்த்தி உள்ளார். பொழுது போக்கும் நாவல்.
–
சீத்தலைச் சாத்தன்