கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை கவிதையில் எடுத்துரைக்கும் நுால். இலக்கண வரையறை எதையும் பற்றி கவலைப்படாமல், சந்தத்தை ஏற்படுத்தி நெஞ்சில் பதியும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
வைணவ ராமானுஜரையும், கணித மேதை ராமானுஜனையும் ஒப்பிட்டுக் காட்டியதுடன் அரிய தகவல்களையும் தந்துள்ளார். ராமானுஜன் படித்த பள்ளி, கல்லுாரி, பணியாற்றிய பல்கலைக்கழகம் என்னும் தகவல்களுடன், ஆரம்ப கால வாழ்க்கைத் தகவல்களையும் திரட்டித் தந்துள்ள தன்மை போற்றுதலுக்கு உரியது.
ராமானுஜனின் சிலை, அவரது கையெழுத்து, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லுாரி, அஞ்சல் துறை, ராமானுஜன் நினைவாக வெளியிட்டு உள்ள இரண்டு அஞ்சல் தலைகள் மற்றும் ஆவணங்களுடன் தரப்பட்டுள்ள நுால்.
–
முகிலை ராசபாண்டியன்