ஊன்றுகோல் பிடிக்க வேண்டிய வயதில் எழுதுகோல் பிடித்தவர் என்ற தகவலோடு அறிமுகமாகும் நாவல். செங்கல்பட்டு அருகே வசிக்கும் பெரிய ஜமீன் மருது பாண்டியர் மகன் அன்புச்செழியன். ஜமீனுக்கு இலக்கணமாய் அடையாளப்படுத்தப்படும் ஆடம்பரம் எதிலும் ஆர்வமில்லாதவன். கடல் கடந்து வணிகம் புரிந்து வருகிறான்.
காலங்காலமாக கட்டிக்காத்து வந்த ஜமீனுக்கான அடையாளங்கள், பேரன் மூலமாகவாவது தொடரட்டும் என்ற எண்ணத்தில் மணம் முடித்து வைக்கின்றனர். பல்வேறு தடங்கல்களுக்கு பின் இரட்டைக் குழந்தை பிறக்கிறது.
இதற்கு, குடிசை மணிவண்ணன், சேரி பொற்செல்வி எனவும், ஜமீன் குடும்ப பணியாளருக்குப் பிறந்த பெண்ணுக்கு, பங்களா லட்சுமி எனவும் பெயர் சூட்டப்படுகிறது. இந்தப் பெயர் சூட்டல் நிகழக் காரணம் என்ன? பகட்டுத் தோரணையில் இறுகிக் கிடந்த ஜமீன் பங்களா, ஏழை எளியோருக்கான வேடந்தாங்கலாக மாறியது எதனால் என்பதை எளிய நடையில் பதிவு செய்கிறது.
–
சையது