தமிழ் மற்றும் பவுத்தப் பண்பாடு என்ற பிரிவை, பல்வேறு வகைகளில் ஒப்பு நோக்கித் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழியும், பவுத்த சமயமும் பல நுாற்றாண்டுகளாக வெளிப்படுத்திய இரு வேறு வாழ்வியல் நெறிகளும், சமூகத்திற்கு வழங்கிய ஒழுக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன.
தமிழர் அறிவு மரபு, பவுத்த சமய மரபு ஆகியவற்றில் காணப்படும் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி, வழிபாடு சார்ந்த கருத்துகளை ஒப்பிட்டு நோக்கி ஆய்ந்துள்ளது. இரண்டிலும் பல கருதுகோள்கள் எவ்வாறு ஒரே கோட்டில் வருகின்றன என்று எடுத்துக் காட்டுகிறது.
பவுத்த அறச்சக்கரம், தமிழர் அறம், தமிழ்க் கடலோடிகள், வணிகர்கள், உலகப் பவுத்த சிற்பங்கள், பவுத்தமும் தமிழும் இணைந்த திராவிடப் பண்பாடு, அயோத்திதாசர் மொழி ஆய்வுகள் என வரலாற்றுச் சான்றுகளோடு விவரித்து செல்கிறது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய வரலாற்றுக் கருவூலம்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு